Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நள்ளிரவில் தர்ணா

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) 2.0 திட்டம், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், சமூக அறிவியல் மற்றும் இயற்பியல் அறிவியலில் திட்ட உதவியாளர்கள் (Project Fellows) நியமிக்கப்படுகிறார்கள். மேலும், தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக உள்ளடக்க துறையில் சூரியன் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் RUSA திட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் அந்தத் திட்டத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கியுள்ளது.

அந்த திட்டம் முழுமை பெறாத நிலையில் சூரியனின் ஊதியத்திலிருந்து பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி சூரியன் பல்கலைக்கழகத்தில்
நள்ளிரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *