இன்று (17.12.2025) மதியம் 2 மணியளவில், ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடித்தை கொடுத்து அதன் விவரங்களை எடுத்துரைத்தேன்.
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2700 ஊழியர்கள், தாங்கள் பெற்ற அசல் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை பெறாமல் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.
கடந்த 04.11.2022 அன்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 01.09.2014 அன்று பணியில் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும்,
ஊதிய வரம்பு அடிப்படையில் அல்லாமல், அசல் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், BHEL ஹைதராபாத் மற்றும் Power Project Division (PPD) ஆகிய இடங்களில், ஏற்கனவே அசல் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே அவ்வாறே தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டி, திருச்சி BHEL ஓய்வு பெற்ற ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகினர். அந்த வழக்கில், கடந்த 02.09.2025 அன்று, நீதிமன்றம், ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து BHEL ஓய்வூதியர்களுக்கும், அசல் ஊதியத்தின் அடிப்படையில் திருத்திய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், இது மூத்த இந்திய குடிமக்களின் உரிமை என்றும் அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
இது குறித்து, கடந்த வாரம் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை வைத்திருந்ததை சுட்டிக்காட்டி, அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர், இக்கோரிக்கையை ஆவன செய்ய தங்களிடம் பரிந்துரை வழங்குவதாக கூறியதையும் அமைச்சரிடம் தெரிவித்தேன். நிச்சயம் தானும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
அத்துடன், ESI மண்டல துணை அலுவலகத்தை திருச்சியில் அமைப்பது குறித்து அமைச்சரிடம் கடந்த முறை வைத்த கோரிக்கையை நிறைவேற்றி ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன்,
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதுகுறித்து இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே அவர்களையும், ESIC பொது இயக்குநர் அசோக் குமார் சிங் அவர்களையும் சந்தித்து நான் நன்றி தெரிவித்துக் கொண்ட போது, ESIC மண்டல துணை அலுவலகத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர, அதிகாரிகளை நியமித்து பணிகளை தொடங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தேன்.
அதன்படி, நேற்றைய (16.12.2025) தேதியிட்ட அதிகாரப்பூர்வமான கடிதத்தில், எனது கோரிக்கையை ஏற்று திருச்சி மண்டல துணை அலுவலகம் அமைக்க code allot செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அந்த அலுவலகத்திற்கு பணியாற்றும் அதிகாரிகளை நியமித்து விரைவில் புதிய திருச்சி ESIC மண்டல துணை அலுவலகம் செயல்பட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, மீண்டும் அமைச்சருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
மக்கள் பணியே என் மன நிறைவுக்கு காரணமாக உள்ள இந்த காலகட்டத்தில், அதில் கிடைக்கும் வெற்றியே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குவதாக உள்ளது என் பணி தொடரும் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments