திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுகுமார் துரைசாமி ஆண்டறிக்கை வாசித்தார். குமாராவேல், நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா நிறுவனத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர் தம் உரையில் மாணவர்களுடன் தன் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய அனுபவத்தின் வழி, மாணவர்களுக்கு தன் தத்துவ அறிவுரைகளையும் வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் விழாவில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 2023 2024 ம் கல்வி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் சிறந்த மாணவர் விருது, இந்த ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் விருது மற்றும் சிறந்த துறைக்கான விருதும் வழங்கப்பட்டது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments