திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்று காவிரி பாலம். இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும் ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை அரசு ஒதுக்கியது. கடந்த 10-ந்தேதி(10.09.2022)நள்ளிரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவிரி பாலத்தின் இரண்டு பக்கம் அடைக்கப்பட்ட இரண்டு மீட்டர் இடைவெளி இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல  அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்கள், கனரக வானங்கள் என அனைத்தும் ஓயாமாரி பகுதி வழியாக சென்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பழைய காவிரி பாலம் வழியாக மீண்டும் கும்பகோணத்தான் தான் சாலையில் திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வரும். இப்பாலத்தில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் காவிரி பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்து காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது . 
பொதுமக்கள் சிரமத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்களை மட்டும் செல்ல அனுமதிருந்தது. இந்நிலையில் பாலத்தை தூக்கி வைத்து 2வார காலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (18.11.2022) அல்லது திங்கள் கிழமை (21.11.2022) முதல் முழுவதும் மூடப்படும் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிடுவார் என தகவல் கிடைத்துள்ளது. 48க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக நெடுஞ்சாலை துறை  அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments