திருச்சி காவேரி மருத்துவமனை 3000 மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்!!
திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியோவாக்கி முறையில் 3000 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்கோவில் அருகே காவிரி மருத்துவமனைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த 17 வருடங்களுக்கு முன்பாக இவ்விடம் வாங்கி மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரி கட்டலாம் என எண்ணியிருந்தனர். இந்நிலையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியோவாக்கி முறையில் அடர் காடுகள் உருவாக்கும் என்னத்தை கையிலெடுத்து இருக்கின்றனர்.
மியோவாக்கி முறையில் அடர் காடுகளில் உருவாக்கும் விதமாக வாழை, புங்கன், நீர்மருது, பாதாம், நீர்க்குமிழி, சீதா உள்ளிட்ட 17 வகையான 3000 மரக்கன்றுகளை 5 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டது.காவிரி மருத்துவமனையில் மருத்துவ கழிவு மற்றும் உணவுக் கழிவுகள் இவ்விடத்தில் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்ப்பாசன வசதிகள் அமைத்து பாதுகாப்பான முறையில் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை மேலாண் இயக்குனர் மணிவண்ணன், நிர்வாக இயக்குனர் செங்குட்டுவன் மற்றும் காவேரி மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.