மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் ஹம்சா ரீஹாபிலிட்டேஷன் சென்டர் இணைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியை காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.செங்குட்டுவன் மற்றும் டாக்டர் ராஜேஸ் அகர்வால், மருத்துவ நிர்வாகி காவேரி மருத்துவமனை துவக்கி வைத்தார்கள். அவர், விளையாட்டுகள் சமூகத்தில் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சக்தி வாய்ந்த கருவி என்றும், மறுவாழ்வில் விளையாட்டின் பங்கு மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
இப்போட்டியின் மூலம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடையையும், புதிய திறன்களை உருவாக்கும் வாய்ப்பையும் பெற்றனர். மேலும், சமூகத்துடன் இணையவும், மறுவாழ்வு மற்றும் மாற்று விளையாட்டுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்வு வழிவகுத்தது.
ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்:
“இந்தப் போட்டி வெறும் விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு வலிமை, தன்னம்பிக்கை, சமூக ஒத்துழைப்பை வளர்க்கும் மேடை. மாற்றுத்திறனாளிகள் தங்களது உற்சாகம் மற்றும் ஆற்றலால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்” என தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு, மாற்றுத்திறனாளிகள் சமூக வாழ்க்கையில் சம வாய்ப்புகளைப் பெற்று முன்னேறுவதற்கான காவேரி மருத்துவமனை மற்றும் ஹம்சா ரீஹாபிலிட்டேஷன் சென்டரின் தொடர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments