திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரியின் மாணவர் கண்டுபிடிப்பாளர் விருது
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின், 'மாணவர் கண்டுபிடிப்பாளர் நிரல்-2020' போட்டிகள் இணைய வாயிலாக நடத்தியது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாணவர்களின் திறனை கண்டறிய 'தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர் நிரல்' போட்டியை, ஐந்தாண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த போட்டி நடப்பாண்டு கொரோனா காரணமாக இணைய வாயிலாக நடத்தப்பட்டது. வேளாண், ஸ்மார்ட் சிட்டி, தொழிலகம் - 4.0, சுகாதாரம், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் கல்வியியல் போன்றவற்றுக்கு தேவையான தொழில்நுட்பங்கள். இப்போட்டியின் முடிவில் சிறந்த, 25 மாணவர் குழுக்களின் கண்டுபிடிப்புகளுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் இந்த ஆண்டு திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம் காம். மாணவி ஸ்ரீநிதி உமாநாதன் மாநில அளவில் ஆறாம் இடமும் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்து ஒரு லட்சம் பரிசுத் தொகையும் வென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீநிதி உமாநாதன் நம்மோடு பகிர்ந்து கொள்கையில்..கல்லூரியில் தொழில் முனைவோர்களாக மாணவர்களினை உருவாக்குவதற்காக காட்டிய வழிகாட்டுதலும்,புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இதனை செய்ய உறுதுணையாக இருந்தது.
மொத்த வியாபார ஜவுளி கடைகளிலும் தையல் கடையில் சென்று அங்குள்ள துணை கழிவுகளை சேகரித்து வந்து அவற்றை மறு பயன்பாட்டிற்கு உதவும் வகையில் செய்ய தொடங்கினேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து உடல் ஊனமுற்றவர்கள், திருநங்கைகள் வைத்து Re tailor's என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்படுத்தி வருகிறோம். கடைகளில் 500 கிராம் துணிக்கு ரூபாய் 10 என்று விலை வாங்கிக் கொண்டு அதனை சுத்தம் செய்து வீட்டிற்கு பயன்படும் மிதியடிகள், தரைவிரிப்புகள், தலையணை உறை போன்றவற்றை செய்ய தொடங்கினோம். அது அனைத்தையும் அமேசான் போன்ற e-commerce நிறுவனங்களின் விற்பனை செய்யத் தொடங்கினோம். தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் எங்கள் நிறுவனத்தில் அடுத்த முயற்சியாக "தீம் டிசைனிங்" தொடங்கினோம். திருச்சி நகரை பொறுத்த வரையில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பார்க்கும் எல்லாவற்றிலுமே கலைநயம் இருக்கின்றது.
அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே நம்முடைய எண்ணங்களைப் பொறுத்து அமையும் எண்ணமும் செயலும் ஒன்றாக அமைந்ததோடு குடும்ப உறவுகளின் ஆதரவும் ஆசிரியர்களின் கல்லூரி நிர்வாகத்தின் ஆதரவும் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. MAQUILLAGE PARLORS PMEGP கடன் திட்டத்திலிருந்து 1,30,000 மூலதன முதலீட்டில் ஜனவரி 2020 இல் தொடங்கினேன். கல்லூரி நிர்வாகத்தின் முழுமையான ஆதரவுடன் ஒரு வளாக நிறுவனம் அமைந்தது என்றார்.
கல்லூரியின் முதல்வர் DR.சுஜாதா தெரிவிக்கையில்... கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் தவறியதே இல்லை. எங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த விருது கிடைத்துள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் பரிசுத்தொகை முழுவதும் வணிக மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn