தூய்மை நகரங்கள் பட்டியல்   தரவரிசையில் திருச்சியை முதன்மை நகரமாக்குவோம் -திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!

தூய்மை நகரங்கள் பட்டியல்   தரவரிசையில் திருச்சியை முதன்மை நகரமாக்குவோம் -திருச்சி மாநகராட்சி அறிவிப்பு!

தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுக்கும்   ஸ்வச் சுர்வேக்ஷன்   2021 காண கருத்துக்கணிப்பில்  திருச்சி குடியிருப்பாளர்கள் சுமார் 48,049 பேர் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர். மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியலை ஸ்வச் சுர்வேக்ஷன் 2020 என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டு இருந்தது. தூய்மை, சுகாதாரம், மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் ஒன்று முதல் பத்து லட்சம் மக்கள் தொகை நகரங்களின் அடிப்படையில் திருச்சி 102வது இடத்தை பிடித்துள்ளது.ஆனால் 2019 இல் 39வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 எனவே இந்த ஆண்டின்     பட்டியல் தரவரிசையில் திருச்சி நகரின் தூய்மையான நகரமாக மாற்றுவதற்காக மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரங்களில் பல்வேறு இடங்களில் கழிவுகளை பதப்படுத்த முப்பதுக்கும் மேற்பட்ட மைக்ரோ உரம் மையம் அமைத்துள்ளோம் .  இது தவிர, பல வணிக நிறுவனங்கள்   குப்பை மறுசுழற்சி முறைகளைக் கொண்டுள்ளன என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு குறைபாடுகள் குறிப்பாக கருத்துக்கணிப்பில் தங்களது கருத்தை பதிவிட்ட குடியிருப்பாளர்கள் அவருடைய பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டுமே பதிவிடுகின்றனர்   இதனால் நகரங்களின் தூய்மை பற்றிய சரியான புள்ளியியல் கிடைக்கப்  பெறாமல் இருக்கின்றன. மத்திய ஹவுஸிங் அமைச்சகம் இந்த குறைகளை சரிசெய்ய   எவ்வித நடவடிக்கைகளிலும்  ஈடுபடாமல் இருக்கின்றனர் என்று மாநகராட்சி அலுவலர்கள் கவலைக் கொள்வதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . 
இது ஒருபுறமிருக்க ,
 இந்த கருத்துக்கணிப்பு பற்றி   மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் இந்த அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு நகரங்களை பார்வையிடாமல் எவ்வாறு   துல்லியமான முடிவுகளை     கருத்துக்கணிப்பைக்கொண்டு   கூற முடியும்.  எனவே இதுபோன்ற நேரங்களில் கருத்துக்கணிப்பில் ஈடுபடாமல் இருத்தல் சிறந்தது என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr