திருச்சி மாநகராட்சியின் புதிய குப்பை தொட்டி மாதிரியை ஆய்வு செய்த நிபுணர்கள்

திருச்சி மாநகராட்சியின் புதிய குப்பை தொட்டி மாதிரியை ஆய்வு செய்த நிபுணர்கள்

திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வகை நிலத்தடி குப்பை தொட்டியின்  மாதிரியை 

 உருவாக்கியுள்ளனர்.
 இதனை திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தினை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுந‌ர்கள்  அதன் தொழில்நுட்பத்தை ஆய்வுசெய்து தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.
 மாதிரி குப்பைத் தொட்டியின் சிறப்பு அம்சமானது  40% நிலத்தின் அடியில் இருக்கும் படி  வடிவமைக்கப்பட்டுள்ளது அதனுடைய பாகங்கள்  கால்வனேற்றப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன. குப்பை தொட்டி நிரம்பி வழிவதை தடுக்கும் வகையில் மூடிகள் பெடல்  மூலம் இயக்கும் வகையில்   உருவாக்கப்பட்டுள்ளன. 

ரூபாய் 14 கோடி செலவில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது மேலும் இந்த குப்பைத்தொட்டி ஆனது கிட்டத்தட்ட 175 இடங்களில் வைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் உள்ளதாகவும் திருச்சி மாநகராட்சி  அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் .

இம்மாதிரி  குப்பைத்தொட்டி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த பொறியியல் துறை அலுவலர்களும் அதனுடைய சிறப்பம்சங்களை பார்வையிட்டு மேலும் இதனை இன்னும் எவ்வாறு  உருவாக்கலாம் என்று த

ங்களுடைய கருத்துக்களையும் கூறி சென்றுள்ளனர். 
இந்த மாதிரியானது  மிகவும் சிறந்ததாக இருக்கும்,  இதனுடைய வடிவமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக தங்களுடைய அலுவலர்கள் பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினம் சென்று ஆய்வு செய்து வந்துள்ளனர் என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
பொதுமக்கள் குப்பைத் தொட்டியை எல்லா தெருக்களிலும் வைக்க வேண்டும் எனும் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் தற்போதைக்கு இந்த மாதிரிகள்  அனைத்தும் மைக்ரோ உர  MCC மையங்கள், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் மட்டுமே தற்பொழுது வைக்கப்பட இருக்கின்றன. தற்போது பயண்பாட்டில் இருக்கும்  குப்பை தொட்டிகள் 2.5 கன மீட்டர் அளவில் குப்பைகளை சேகரிக்கும் வண்ணம் இருந்தது.

ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி ஆனது 4 கன மீட்டர் அளவுக்கு கழிவு பொருட்களை சேகரிக்க உதவும்  பல்வேறு பகுதிகளில் இந்த குப்பை தொட்டிகளை வைப்பதற்கான வேலைப்பாடுகள்  கூடிய விரைவில் நடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu