திருச்சியில் முதல்முறையாக வரவேற்பு அறையுடன் கூடிய நவீன கண்காணிப்பு அறை மாநகர் காவல் ஆணையர் திறப்பு

திருச்சியில் முதல்முறையாக வரவேற்பு அறையுடன் கூடிய நவீன கண்காணிப்பு அறை மாநகர் காவல் ஆணையர் திறப்பு

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரவேற்பாளர் அறை, ஆய்வாளர் அலுவலகம் மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து  வைத்தார்.

மரக்கன்றுகளை நட்டு பின்னர் பேசிய அவர்

 காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகளுடன் கூடிய வரவேற்பறை மற்றும் 112 சிசிடிவி கேமராக்களை ஒருங்கிணைக்கப்பட்டு  24 மணி நேரமும் கோட்டை காவல் நிலையத்தில்  சிறப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கும் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 மேலும் இளைஞர் ஒளிர் கவினுலகு  திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 15 கல்வியில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தேவையான எழுது பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில்  திருச்சி மாநகர காவல்துறை (சட்டம் ஒழுங்கு) துணை ஆணையர்   பவன் குமார்  ,  கோட்டை காவல் நிலைய துணை ஆணையர் ரவி அபிராம், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர்  கலந்து கொண்டனர்.