வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவரை திருச்சி மாநகர போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு நபர்களையும், போலீசார் காவலில் எடுத்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க மாநகர காவல் துறையின் 15 பேர் கொண்ட தனிப்படையினருடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பிவைத்தனர்.
ரத்தன் மற்றும் சங்கர் மீது 10 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்வதற்காக, தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். தமிழ்நாட்டில் திருடிய நகைகளை விற்று விட்டோம் என்றும், பணமாக கையில் வைத்திருக்கிறோம் என்றும் கொள்ளையர்கள் தரப்பில் கூறியுள்ளனர். தனிப்படை போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்ய முயற்சித்துள்ளனர்.
குற்றவாளிகள் இருவரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு இன்று (06.03.2023) கடைசி நாள். எனவே தனிப்படையை சேர்ந்த உதவியாளர் உள்ளிட்ட மூவர் ரெத்தன் மற்றும் சங்கர் ஆகியோரை திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டனர். மற்ற 12 போலீசார் பணத்தை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனிப்படையினர் லஞ்சம் கேட்பதாக குற்றவாளிகளின் உறவினர்கள் ராஜஸ்தானில் பொய்யாக புகார் கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து அவர்கள் தற்பொழுது திருச்சி திரும்பி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் (ரத்தன், ராம்பிரசாத், சங்கர், ராமா(பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர் 5000 பேர் உள்ளனர். முக்கியமாக வடமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில் அவருடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சேகரித்து வைக்க வேண்டும் என ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments