காவல்துறையினருக்கு கவர் விவகாரத்தில் 6 பேர் பணியிடை நீக்கம் காவல் ஆணையர் அதிரடி
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணையம் அதிரடி சோதனை பண கவர்கள் பறிமுதல்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் நிலையங்கள் நேரடியாக ஒவ்வொரு காவலர்களின் விபரங்களுடன் தேர்தலுக்கு பண கவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கவரியிலும் பணம் வைத்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது .
தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் உதவி ஆணையர் நேரடியாக சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் 5 காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .குறிப்பாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் உறையூர்,கண்டோண்மென்ட் காவல் நிலையங்களில் கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணையில் காவல்துறையினருக்கு திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய்த கவருடன் விசாரணை நடத்தி வருகின்றார்.
மேலும் 2000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தகுதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கன்டோன்மென்ட் உறையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட கவர்கள்(பணத்துடன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பண கவர் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் தில்லை நகர் காவல் நிலையத்தில் உள்ள இரண்டு எழுத்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .மேலும் மற்ற காவல் நிலையங்களல் உள்ள ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர் இடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சற்று நேரத்துக்கு முன்னதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் 6 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
பணியிடை நீக்கம் செய்த 6 பேர் விபரங்கள் தில்லை நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதரசி ஸ்டெல்லா மேரி தில்லைநகர் எழுத்தர் சுகந்தி அரசு மருத்துவமனை எழுத்தர் பாலாஜி மாநகர நுண்ணறிவு பிரிவை சேர்ந்த சங்கர் மற்றும் கலியமூர்த்தி
தேர்தல் ஆணைய உத்தரவு படி உதவி ஆணையர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட பண கவர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW