Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பொங்கலுக்கு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

திருச்சி மாநகரில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், கோவில்கள், முக்கிய வீதிகள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி மாநகர காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் தெரிவித்தார்கள்.

மாநகரின் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 9 சோதனை சாவடிகளிலும் போதிய காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர வாகன சோதனை செய்யவும், 14 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 7 நான்கு சக்கர இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் (Pink Patrol) மூலம் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 12 போக்குவரத்தை சீர்செய்யும் (Traffic Marshal) இருசக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மது போதையில் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகள் மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை (01.01.2026 முதல் 31.01.2026 வரை) முன்னிட்டு திருச்சி மாநகரகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினந்தோறும் நடத்திட் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள A மற்றும் A++ சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்கவும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள காவல் துணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18.01.2026-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை மற்றும் ஓடத்துறை படித்துறைகளில் போதுமான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

மேலும் மாநகரத்தில் உள்ள முக்கிய கோவில்கள், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள், மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 625 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *