Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள் வரும் 11-ல் திறப்பு!- மாவட்ட ஆட்சியர்

No image available
திருச்சி பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி

திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்களுக்கான அரசு விடுதிகள் வரும் 11-ம் தேதி திறக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு

தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.,) பொதுத்தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கான தேர்வுகள் நடக்க உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை நல விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் இந்த தேர்வுகளை சிறப்பாக எழுத உதவிடும் வகையில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகள் வரும் 11-ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

Image

இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. விடுதி வசதியை, தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *