திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டோன்மென்ட், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோர உணவு கடைகளை ஏராளமானனோர் வைத்து தங்களது வாழ்வாதாரத்திற்க்கு நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே சாலையோர உணவு கடைகள் தள்ளு வண்டியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. சாலையோர உணவு கடையை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை மாநகராட்சி ஊழியரிடம் வாக்குவாதம் செய்து அவர்களளிடமிருந்து உடைந்த நிலையில் திரும்ப பெற்றனர். அதற்கு முன்னதாக ஜேசிபி வாகனங்களை வைத்து அவரது அவர்களது உணவக தள்ளு வண்டிகளும் பொருட்களும் உடைக்கப்பட்டதற்கு ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இரண்டு நாட்களாக திருச்சியில் உள்ள சாலையோர உணவு கடைகள் போடக்கூடாது அதிரடி சோதனை நடத்தி பொருட்களை கை போற்றுவோம் என மாநகராட்சி இடம் இருந்து தகவல் வெளிவந்ததாக அவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக மத்திய பேருந்து நிலையம் கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையோர உணவாக கடைகள் இல்லை. ஆனால் பிரியாணி உள்ளிட்ட வாகனங்களில் வைத்து இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் நிறுத்தி விற்பனை செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு சாலையோர உணவுக் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாங்களும் இரவு நேரங்களில் மட்டுமே சாலை ஓரங்களில் உணவுகளை விற்பனை செய்து வருகிறோம். இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தார்கள் என்பது புரியவில்லை என தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

காரணம் என்ன என்று மாநகராட்சி அதிகாரிடம் கேட்டால் சாலையோர உணவு கடைகளால் ஆக்கிரமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதைவிட பிரியாணி மற்றும் இரவு நேர கடைகள் வாகனங்களை வைத்து விற்பனை செய்பவர்களால் தான் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என சாலையோர உணவு கடையில் உள்ள உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் யாரு தவறு செய்கிறார்கள் எதற்காக இவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்ற கேள்வியை புரியாத புதிராக உள்ளது. இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நியாமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோளையும் வைத்துள்ளனர்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           186
186                           
 
 
 
 
 
 
 
 

 08 February, 2024
 08 February, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments