திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், TMRT 108 அமைப்பும் இணைந்து
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று (12.11.2025) நடைபெற்றது.
இந்த முகாமை மேயர் மு.அன்பழகன், அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், ஆகியோர் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள், பரிசோதனைகளை பார்வையிட்டார்கள்.
இம்முகாமின் நோக்கம் நமது மாநகராட்சி ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி,
அவர்கள் தினசரி சேவைகளை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பல பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ பரிசோதனை கண் பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் (Diabetic) பரிசோதனை, பல் பரிசோதனை (Dental Check-up) இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்தார்கள்.
இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி, Dr. பிரவீன் கிருஷ்ணகுமார் – Thillai Dental Care,
Dr. வருண் பிரசன்னா – Prabhu Diabetic Multi-Speciality Hospital, Dr. ரோஷன் – Thillai Medical Center, Dr. அர்ச்சனா – The Eye Foundation
இம்முகாமை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய TMRT 108 அமைப்பின் அலுவலகத் தலைமைப் பொறுப்பாளர்கள் விமல் ராஜ் தலைவர் (Chairman), இனியன் அமுதன் துணைத் தலைவர் (Vice Chairman), பிரேம் குமார் – செயலாளர் (Secretary)
இது போன்ற சமூக நல நடவடிக்கைகள் மூலம் TMRT 108 அமைப்பு சமூக பொறுப்பை உணர்ந்து தொடர்ந்து பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments