Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் வடகிழக்கு மழைக்கு தயாரான மாநகராட்சி: 24 மணி கண்காணிப்பு, நிவாரண முகாம்கள் அமைப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் புகார் எண். 8300113000 மற்றும் 0431-3524200 ஆகிய எண்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

தற்போது 5 மண்டங்களிலும் மழைநீரை வெளியேற்றவதற்காக 20HP Oil Engine மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் கழிவு நீர் அகற்றுவதற்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 12 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதை கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.

வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கென மாநகராட்சிக்குள் 22 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணிக்கு மண்டலத்திற்கு தலா ரூ.20.00 இலட்சம் வீதம் ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 159.615 கீ.மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *