திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மேயர் மு. அன்பழகன் மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுபினர்கள்,
அலுவலர்களுடன் பார்வையிட்டார்கள். மழை அதிக அளவு பெய்தால் மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னெடுப்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக மேயர் தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , R.M.S. காலாணி கோரை ஆறு சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதிலிருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக தடுப்பு சட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி மின் மற்றும் டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்து தடை போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் அகற்றுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வில்
மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் உதவி ஆணையர்கள் சண்முகம், சென்னு கிருஷ்ணன், உதவிசெயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments