திருச்சி மாநகரில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக பல முக்கியமான சாலைகள் சேதமடைந்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் பேருந்து செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கியமான சாலைகளை முதற்கட்டமாக சீரமைக்கப்படவுள்ளது, இதற்காக மாநகராட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறும் தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை 263மிமீ மழையை திருச்சி பெற்றுள்ளது. இது எப்போதும் பெய்யும் மழையை விட சற்று அதிகமாகும். அதிகளவில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மழை முழுதாக நிற்காத காரணத்தினால், சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சரிசெய்ய முடியாததல், முக்கியமான சாலைகளுக்கு மட்டும் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. பேருந்துகள் செல்லும் சாலைகள் மட்டுமின்றி, தில்லைநகர், தென்னூர், வயலூர் சாலை, கருமண்டபம் உறையூர் ஆகிய முக்கிய பகுதிகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments