Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொலை மற்றும் வழிபறி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த திருச்சி நீதிமன்றம்

No image available

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V. துறையுர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இறந்துபோன சேகர்  (வழக்கறிஞர், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆச்சி குமார் என்பவரின் மருமகன் அம்பிகாபதியை கொலை செய்துள்ளார்.  வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு 25.05.15 அன்று CBCID-க்கு மாற்றப்பட்டது.

கொலைக்கு பழிவாங்கும் விதமாக  குமார் (எ) ஆச்சிகுமார்  என்பவர் 4 நபர்களுடன் சேர்ந்து  சேகர் என்பவரை கடந்த 16.12.2015 அன்று கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன சேகர் என்பவரின் மனைவி லதா  என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, வழக்கில் 13 நபர்கள் எதிரிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்த நிலையில்,  பால் எமர்சன் பிரசன்னா (Splitup case) என்பவரை தவிர, மற்றவர்களுக்கு  கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (08.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாதன் (ADJ-II) அவர்கள்  குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 10,000-ம் அபராதமும் விதித்து  அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET பேருந்து நிறுத்ததில்  28.01.2023 அன்று தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்றபோது வெங்கடேஷ்  இருசக்கர வாகனத்தில் வந்து  ஆரோக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.

 அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (08.07.2025) திருச்சி குற்றவியல் நடுவர்  முகமுது சுகைல் அவர்கள்  வெங்கடேஷ்  என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய். 5,000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள் ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *