திருச்சிராப்பள்ளி மாவட்டம், வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு சித்தாம்பூர், அரிஜன தெருவை சேர்ந்த மருதை என்பவருக்கும். அதே தெருவை சேர்ந்த செந்தில் என்பவருக்குமிடையே அவர்களது விவசாய நிலத்திற்கு கால்வாயிலிருந்து குழாய் மூலம் நீர் பாசனம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 24.09.2021-ம் தேதி தெற்கு சித்தாம்பூர் வேப்ப மரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்த மருதை பொன்னம்பலம் என்பவரை, செந்தில் என்பவர் அங்கிருந்த சிமெண்ட் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இறந்து போன மருதை என்பவரின் மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செந்தில் ஆறுமுகம், சேட்டு ஆறுமுகம் மற்றும் பவானி ஆகியோர் மீது வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (21.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாதன் (ADJ-II) அவர்கள் செந்தில் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 1000 அபராதமும், சேட்டு என்பவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையிலும். பவானி என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்..
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் இசைவாணி மற்றும் வாத்தலை காவல் நிலைய நீதிமன்ற தலைமை காவலர் ஜெகநாதன் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
Comments