திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அரசலூர், மல்லிகை நகரைச் சேர்ந்த லூர்து வசந்தன் என்பவரின் குடும்பத்திற்கும், அரசலூர், தெற்கு தெருவை சேர்ந்த விஜயராகவன் என்பவரின் குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில்
கடந்த 06.11.2018-ம் தேதி அரசலூர் தெற்கு தெரு வழியாக வசந்தன் அவரது அக்கா ஹேமா மற்றும் சகோதரர் விமல் ,மனோகரன் ஆகியோர் நடந்து சென்றபோது விமல் என்பவரை, விஜயராகவன் வளர்மதி சுப்பிரமணி வசந்தகுமார் ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக இறந்து போன விமல் என்பவரின் சகோதரர் லூர்து வசந்தன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (23.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாதன் (ADJ-II) அவர்கள் விஜயராகவன் மற்றும் வசந்தகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 1000 அபராதமும், வளர்மதி என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் தொட்டியம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் வளர்மதி ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
Comments