திருச்சியில் மூன்று இலக்கத்தை நெருங்கிய கொரானா தொற்று

திருச்சியில் மூன்று இலக்கத்தை நெருங்கிய கொரானா தொற்று

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சியில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின் படி திருச்சி மாநகரைப் பொருத்தவரை ஒரு நாளில் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையாக  கடந்த வாரம் முழுவதும் 50 ஆக இருந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது .

நோய்தொற்றால்  பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காஜாமலை வளாகத்தில்  கொரோனா சேவை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்காயிரம் மாதிரிகளில் இருந்து 4100 மாதிரிகளை தினமும் பரிசோதனை செய்கிறோம். ஆனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சதவீதத்தில் இருந்து 2.2  சதவீதம் வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது அதனால் பரிசோதனைக்குக்கு உட்படுத்தும் மாதிரிகளின் அளவை அதிகரித்து உள்ளோம் என்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81