திருச்சியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வியாபாரிகள் வாகன ஓட்டிகள் என அனைவரும் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த
சிரமம் அடைந்து வருகின்றனர் அத்தியாவசிய தேவை மற்றும் பணிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.நிழலை தேடி மாநகரில் அனைவரும் அலைந்து வரும் நிலையில் திருச்சி காவல்துறை பரிந்துரையின் படி திருச்சி வெங்காய தரகு மண்டி
வணிக சங்கத்தின் சார்பாக பழையபால்பண்ணையில் இருந்து காந்தி மார்க்கெட் செல்லும் சாலையில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் 200 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க கோடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments