Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: தேர்தல் அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கை? தலைவர்கள் சிலைகளை மூடுவதில் குளறுபடி!

விளம்பர திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் – சுவர் விளம்பரங்கள் அகற்றுவதில், சிலைகளை மூடுவதில் பாரபட்சம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மறைக்கவும், கொடிக்கம்பங்களை அகற்றவும் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், சிலைகளை மூடி மறைக்கும் பணியில் மாநகராட்சி மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே திருச்சி மாநகரில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலைகள் மூடப்பட்ட நிலையில், கடந்த விளம்பர ஆட்சியின்போது திறக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்துநிலையத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களது சிலைகள் மூடப்படாதது குறித்து அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர், இது மட்டுமன்றி டிவிஎஸ் டோல்கேட், செந்தண்ணீர்புரம் பாலம், அரியமங்கலம், தஞ்சை சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாற்றுக் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டும், திமுகவினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்அதிகாரிகள் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *