திருச்சி மாவட்ட வேட்பாளர்கள் பத்திரிக்கையில் தேர்தல் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெற  வேண்டும் - மாவட்ட தேர்தல் அதிகாரி

திருச்சி மாவட்ட வேட்பாளர்கள் பத்திரிக்கையில் தேர்தல் விளம்பரம் செய்ய முன் அனுமதி பெற  வேண்டும் - மாவட்ட தேர்தல் அதிகாரி

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொதிகளுக்கு வருகின்ற (06.04.2021) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை கடந்த  (26.02.2021) பிற்பகல் அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அன்று  பிற்பகல் முதலே அமுலுக்கு வந்துள்ளது. தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. என கண்காணிக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

 

                          Advertisement 

அந்தவகையில், 9 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில், நாளிதழ், விளம்பரங்கள், வெளியிடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராகவும், வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உதவி இயக்குநர் (மக்கள் தொடர்பு), அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர், நாளிதழ் முதன்மை செய்தி ஆசிரியர், தேசிய தகவல் மைய அலுவலர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட  குழுவிடம் முன் அனுமதி பெற்ற பின்பே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். மாறாக கட்சியின் சார்பிலோ, தனிநபர் சார்பிலோ, பொதுவாக விளம்பரம் கொடுத்தால்; பத்திரிக்கையில் விளம்பரம் செய்யக் கூடாது. 

எனவே, செய்தித்தாளில் விளம்பரம் செய்வதற்கு எழுத்து வடிவிலும், மாதிரி விளம்பரங்களையும் சேர்த்து உரிய படிவத்தில் எழுத்து மூலமாக மாவட்ட ஊடக தணிக்கை மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆய்விற்கு அனுப்பி வைத்திட வேண்டும். இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வருகின்ற (05.04.2021, 06.04.2021) ஆகிய இரண்டு தினங்கள் பத்திரிக்கைகளில் தேர்தல் விளம்பரம் செய்ய MCMC ஊடகம் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். 

                             Advertisement

மாவட்ட அளவிலான குழு மேற்காணும் விளம்பரங்களை ஆய்வு செய்து ஆட்சேபனையான இனங்களை நீக்கியோ, திருத்தியோ அவற்றிக்கான உரிய அனுமதி வழங்கும். மேலும், இந்த விளம்பரத்திற்கான கட்டணத்தை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேர் செய்யும் போது வங்கி வரைவோலையாகவோ, அல்லது காசோலையாகவோ வழங்கப்பட வேண்டும். இந்த அனுமதி வழங்கப்பட்ட பின்னரோ நாளிதழ்களில் தேர்தல் விளம்பரங்கள் பிரசுரிக்க இயலும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வழிமுறைகளை அனைத்து கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களும், செய்தி நிறுவனங்களும் தவறாமல் பின்பற்றிட வேண்டும்.

மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், ஊடக அனுமதி மற்றும் ஊடக கண்காணிப்புக் குழு கூட்டம் கூடி அன்றைய தினம் வரும் விண்ணப்பங்களுக்கு உரிய அனுமதி அல்லது உரிய பதில் வழங்கப்படும். இதனை மீறும் பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81