திருச்சியில் நாளை(நவம்பர் 12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

திருச்சியில் நாளை(நவம்பர் 12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.12) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வேலை வழங்குவோர் நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்வு செய்வதற்கான வேலை வாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடை யவர்கள் பங்கேற்கலாம். 

கல்விச் சான்று, மதிப்பெண் சான்று,
ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் வர வேண்டும்.

இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்தாகாது. அப்படியே தொடரும்.

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங் களை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். 
இப்பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision