திருச்சி மாவட்டத்தில் 14 மற்றும் 15 பிப்ரவரி ஆகிய தேதிகளில் திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 20 காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் அல்லாத பகுதிகளில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு டாக்டர் இரா காஞ்சனா வனப்பாதுகாவலர் திருச்சி அவர்களின் அறிவுரையின்படியும், சீ. கிருத்திகா மாவட்ட வன அலுவலர் திருச்சி அவர்களின் ஆலோசனையின் படி நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பு செங்காட்டுப்பட்டி காப்பக்காடு, செங்காட்டுப்பட்டி விரிவாக்க காப்புக்காடு, காளியம்மன் கோவில் திட்டு காப்புக்காடு, சோழ மாத்தி காப்புக்காடு, கன்னிமார் சோலை காப்புக்காடு, சொரூபம் பஞ்சதாங்கி காப்புக்காடு, கருப்பு ரெட்டியாபட்டி காப்புக்காடு, குமரிக்கட்டி காப்புக்காடு, செம்மலை காப்புக்காடு, பெரிய மலை காப்புக்காடு,
கண்ணூத்து காப்புக்காடு, தச்சமலை காப்புக்காடு, மரம ரெட்டிபாளையம் காப்புக்காடு, மேல் அணைக்கட்டு காப்புக்காடு, நேரு நினைவுக் கல்லூரி, காஞ்சேரிமலை டாக்டர் தோட்டம், திண்ணனூர், BHEL திருச்சி, பிஷப் ஹேபர் கல்லூரி மற்றும் இரட்டைமலை ஒன்டி கருப்பர் கோவில் ஆகிய நிலப் பகுதிகளில் பறவைகளின்
எண்ணிக்கை பறவைகளின் வாழ்விடம் நிலப் பறவைகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் 100கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது
இந்த கணக்கெடுப்பில் வனத்துறையைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பிஷப் ஹேபர் கல்லூரி,
ஜமால் முகமது கல்லூரி, நேரு நினைவு கல்லூரி, திருச்சியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கணக்கெடுப்பு இன்று
நிறைவடைந்ததை அடுத்து நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பறவையியல் நிபுணர்கள் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு நிலப் பறவைகள் பாதுகாப்பு மற்றும் பறவைகள் உயிரியல் பல்வகை பாதுகாப்பில் வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இக்கணக்கெடுப்பிற்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் ரவி அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments