Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பண வெகுமதி அளித்து பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நிலுவையில் உள்ள பிடி ஆணைகள் சம்மந்தமாக தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி உத்தரவின்படி காவல் துணை 
கண்காணிப்பாளர், மதுவிலக்கு. (பொறுப்பு) ஜீயபுரம் உட்கோட்டம், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

16.09.2021-ந் தேதி மேற்படி தனிப்படையினர் 18 பிடி ஆணைகள் நிலுவையில் இருந்த பழங்குற்றவாளி (DOSSIER CRIMINAL) சுதாகர் (27), த.பெ. சுகுமார், பெரியார் நகர் கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம்-தாலுக்கா என்பவர், கீழ அல்லூரில் அவரது உறவினர் வீட்டில் அவரது நண்பர்களான ஜெயகுமார் (37), த.பெ. நாகரெட்டியார், காந்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் மற்றும் பாலமுருகன் (28), த.பெ. துரைராஜ், நடுத்தெரு, சூரியனூர், குளித்தலை, கரூர் மாவட்டம் ஆகியோருடன் தலைமறைவாக இருந்தவரை பிடித்து வரப்பட்டது.

மேற்படி பழங்குற்றவாளி (DOSSIER CRIMINAL) சுதாகர் என்பவருக்கு, திருச்சி மாவட்டத்தில் 26 குற்ற வழக்குகளும், திருச்சி மாநகரத்தில் 2 குற்ற வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் ஒரு குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த  தனிப்பபடையினரின் இச்செய்கைக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி பண வெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் சரகம் இந்தியன் வங்கி அருகே, வயதான ஆதரவற்றவர்களுக்கு வேம்பு வயது 50, க.பெ. நீலமேகம், மேலவெள்ளுர், முசிறி 
என்பவர் இன்று (16.09.2021)-ம் தேதி வங்கியின் அருகில் அமர்ந்து பணம் பட்டுவடா செய்து கொண்டிருந்த போது, வடமாநில இளைஞர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் வந்து மேற்படி நபர் வைத்திருந்த பணம் ரூ.49,000/- மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இது சம்மந்தமாக தகவல் கிடைத்த சில மணித்துளிகளில், தொட்டியம் காவல் 
நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், தலைமைக்காவலர் கதிரவன், காவலர் பிரிதிவிராஜ் மற்றும் அய்யப்பன் ஆகியோர்கள் துரிதமாக செயல்பட்டு வடமாநில இளைஞர்களான கொள்ளையர்களை மடிக்கி பிடித்துள்ளனர்.

அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மேற்படி இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்படி செய்கையினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பண வெகுமதி வழங்கி வெகுவாக பாராட்டினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *