Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு திருச்சி மாவட்ட இளையோர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

1. பணியின் பெயர் : தேசிய இளையோர் தொண்டர் (National Youth Volunteer)

2. தேர்வு செய்யப்படும் தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் : கிராமங்கள் தோறும் புதிய இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களை அமைத்தல் மற்றும் இளையோர் மன்றங்களை புதுப்பித்தல்,

• இளையோர் மன்றங்களுக்கு வங்கியில் சேமிப்புக்கணக்கு துவக்கி தருதல், சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் மன்றங்களை பதிவு செய்ய உதவி செய்தல், 

• திருச்சி மாவட்டத்தில் நேரு யுவ கேந்திராவில் இணைந்து செயல்பட்டுவரும் இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழிற்கல்வி பயிற்சி அளித்தல், வாழ்க்கை நிறன் சுல்வி பயிற்சி அளித்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை இளையோர்கள் பெற உதவி புரிதல் மற்றும் பாலின பாகுபாடு போன்ற சமூக நல பிரச்சனைகளை முன்னிறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கங்கள் செய்தல் ஆகியன.

• அவசர காலத்தில் நிர்வாகத்திற்கு உதவவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் அழைக்கப்படலாம்.

3. பணியின் காலம் : இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. முதல் வருடத்தில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு மட்டுமே இரண்டாம் ஆண்டிற்க்கான பணி நீட்டிப்பு வழங்கப்படும். இப்பணியினை எவரும் நிரந்த பணியாக சட்டப்படி உரிமை கோர இயலாது.

4. கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். முழு நேர மாணவ மற்றும் மாணவியர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டாம். 

5. வயது வரம்பு : 01.04.2023 அன்று 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

6. மாத மதிப்பூதியம் : ரூ.5,000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)

7. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.03.2023ம் மாலை 05.000 வரை இதற்கான விண்ணப்பபடிவத்தினை மாவட்ட இளையோ அலுவலர், தேரு யுவ கேத்திரா, ரேஸ் கோர்ஸ் ரோடு, (அரசு சட்டக்கல்லூரி எதிரில்) காஜாமலை, திருச்சிராப்பள்ளி – 620 023 என்ற முகவரியில் நேரில் பெற்றும் அல்லது www.nyks.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதியிறக்கம் செய்தும் தங்களது விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2421240, மற்றும் (DYO: 7736811030, APA:9486753795) என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *