திருச்சி சிறுகனுர் பகுதியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் பங்கேற்க திமுக கட்சி தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரிய கருப்பன், சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யநாதன், கணேசன் எம்.பிக்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அருண் நேரு, கவிஞர் சல்மா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் முதலமைச்சரை வரவேற்றனர்.
திமுக மாநில மாநாட்டில் மாலை ஐந்து மணிக்கு கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியை ஏற்றிய பிறகு
திமுக வின் 7 துணை பொதுச் செயலாளர்கள், மற்றும் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆகியோர் உரையாற்றுகின்றனர்
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விழா மேடையில் பேச இருக்கிறார் அப்பொழுது தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments