திருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட  கூட்டம்

திருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட  கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட   பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில்   மார்ச் 1ஆம் தேதி கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. வரலாறு காணாத பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22/02/21 அன்று நடைபெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகவும் சிறப்பாக மாவட்ட கழகத்தின் சார்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது .

மார்ச் 14 அன்று திருச்சியில்  நடைபெறக்கூடிய கழகத்தின் 11வது மாநில மாநாட்டில் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சிறப்பாக பங்கு பெறுவது எனவும்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு பெறுவது குறித்தும். கழக ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்  கே.என். சேகரன், மாநில நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, செந்தில், கோவிந்தராஜ் மற்றும்  ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மாவட்டத்தின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM