திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதியின்னுடைய சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் தலைமை தாங்க கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பகுதி கழக, ஒன்றிய, அணிகளின் நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சிவார்டுகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் குணா ஒன்றியக் கழக பொறுப்பாளர் மாரியப்பன் சின்னஅடைக்கன் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் மணிவேல் மோகன். டி பி எஸ் எஸ் ராஜ்முகமத் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments