போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் பரத் சீனிவாசன் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரும் கும்பலை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சமயபுரம் டோல் பிளாசா அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தமிழக பதிவு எண் கொண்ட சொகுசு காரை சோதனையிட்டனர். அந்த காரில் வெள்ளை உரை சாக்குப்பையில் காரின் பின்புறம் ஒளித்து வைத்து எடுத்து வந்த 22 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த தலைவன் தேனி மாவட்டம் தேவாரம் என்ற ஊரைச் சேர்ந்த ஆசை (வயது 34) மற்றும் புவனேஸ்வரன் (வயது 32) ஆகிய இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததது தெரியவந்தது.
இதனையடுத்து கடத்து வரப்பட்ட 22 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் அதற்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 3ல் பொறுப்பு நீதிபதி கார்த்திக் ஆசாத் முன் 2 பேரையும் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதனுடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments