கிழக்கு தொகுதி கழக வேட்பாளர் ஆர்.மனோகரன் 500க்கும் மேற்பட்டோருடன் தொகுதி முழுவதும் இருசக்கர வாகனப்பேரணியில் ஈடுபட்டு வாக்குசேகரித்தார்.
Advertisement
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக பொருளாளர் ஆர்.மனோகரன் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் இருசக்கர வாகனப்பேரணியில் ஈடுபட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
Advertisement
500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக்கட்சியினர் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்றபடி பொதுமக்களிடம் வாக்குதிரட்ட, தொடர்ந்து திறந்தபிரச்சார வாகனத்தில் கழக வேட்பாளர் ஆர்.மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வீதி, வீதியாகச் சென்று மக்களிடம் வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.
திருச்சி அண்ணாசிலையிலிருந்து புறப்பட்ட இருச்சகர வாகனப்பேரணியானது ஆண்டாள்தெரு, இ.பி.ரோடு, காந்திமார்க்கெட், கீரைக்கொள்ளை, பாலக்கரை, எடத்தெரு, காஜாபேட்டை, சுப்ரமணியபுரம் வழியாக ஏர்போர்ட் வரை சென்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments