தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட பொதுப்பார்வையாளர்கள், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

பொதுப்பார்வையாளர்களாக, 140-திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதிக்கு திரு.ஜெகதீஷ் பிரசாத் மீனா, இ.ஆ.ப., (தங்குமிடம்: A1, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6381137496), 139-ஸ்ரீரங்கம் தொகுதிக்கு திரு.ஜெரம் போபா, இ.ஆ.ப., (தங்குமிடம்: B8, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6380128857), 138 மண்ணச்சநல்லூர் மற்றும் 142 திருவெறும்பூர் தொகுதிகளுக்கு திரு.KVN.சக்ரதர் பாபு, இ.ஆ.ப., (தங்குமிடம்: B10, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6381279675), 145 முசிறி மற்றும் 146 துறையூர் (தனி) தொகுதிகளுக்கு திரு.பிஜய் குமார் தாஸ், இ.ஆ.ப., (தங்குமிடம்: B4, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6381550233), 143 இலால்குடி மற்றும் 144 மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்கு திரு.பிரவீன் குமார் லக்கர், இ.ஆ.ப., (தங்குமிடம்: B5, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி:

6381157062) மற்றும் 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதிக்கு திருமதி.மதுஸ்மிதா சாகு, இ.ஆ.ப., (தங்குமிடம்: B9, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6381238681) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல் பார்வையாளராக திரு.அபய் சிங், இ.கா.ப., (தங்குமிடம்: A2, அரசு விருந்தினர் மாளிகை, திருச்சி, தொலைபேசி: 6381273596) வருகை புரிந்துள்ளார்.
தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக, 140-திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதிக்கு திரு.விவேக் உபத்யாய், IRS (தொலைபேசி: 6381277984), 138-மணப்பாறை மற்றும் 142-திருவெறும்பூர் தொகுதிகளுக்கு திரு.அனுப் பந்த், IRS (தொலைபேசி: 6381538041), 145 முசிறி மற்றும் 146 துறையூர் (தனி) தொகுதிகளுக்கு திரு.அஜித் குமார் தாகூர், IRS (தொலைபேசி: 6383946421), 143 இலால்குடி மற்றும் 144 மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்கு திரு.ராஜேஷ் அருண்குமார் (தொலைபேசி: 6381261169),

139 ஸ்ரீரங்கம் தொகுதிக்கு திரு.அமித் உருஜ்கையா, IRS (தொலைபேசி: 6383914108) மற்றும் 141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும் 142 திருவெறும்பூர் தொகுதிகளுக்கு திரு.பால் அர்ஜுனன் கோபால், IRS (தொலைபேசி: 6383903295) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தேர்தல் மாதிரி நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக, மேற்கண்டோரைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24X7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 0000 01 மற்றும் தொலைபேசி எண்கள்: 0431 2905736, 0431 2905028, 0431 2905089, 0431 2905084 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments