திருச்சி, முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்ற கால்நடை மருத்துவரிடம் அவரது வீட்டுமனையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்க்கு பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்ற வேண்டி விண்ணப்பித்ததன் பேரில், நிரந்தர வீட்டு மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, தாத்தையங்கார்பேட்டை
மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் சரவணன், வயது 56/25, த/பெ பழனியாண்டி என்பவரை அணுகியபோது கடந்த 25.09.2025ந்தேதி, சரவணன் ரூ.1,500/- கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 29.09.2025ந்தேதி கால்நடை மருத்துவர் முத்தையா என்பவர் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 29.09.2025ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது வணிக ஆய்வாளர் சரவணன் லஞ்சப்பணம் ரூ.1,500/-ஐ கால்நடை மருத்துவர் முத்தையாவிடமிருந்து
கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments