அக்டோபர் 6 – திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரத்தைச் சார்ந்த கோட்டங்களில் அக்டோபர் 2025 மாதத்திற்கான பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்பார்வை பொறியாளர், பெருநகரம்/திருச்சி அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்தக் கூட்டங்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து வருகின்றனர்.
ஏற்கனவே முசிறி 03.10.2025 மற்றும் துறையூர் 07.10.2025 – நாளை கோட்டங்களுக்கான குறை தீர்க்கும் நாட்கள் நெருங்கி விட்ட நிலையில், மின்நுகர்வோர்களுக்கு மீதமுள்ள கூட்டங்களின் அட்டவணை நினைவூட்டப்படுகிறது.
முசிறி கோட்டம் 03.10.2025வெள்ளிக்கிழமை, துறையூர்07.10.2025 செவ்வாய்க்கிழமை,திருவரங்கம்10.10.2025வெள்ளிக்கிழமை
,இலால்குடி14.10.2025செவ்வாய்க்கிழமை,திருச்சி கிழக்கு17.10.2025 வெள்ளிக்கிழமை ,திருச்சி நகரிய21.10.2025செவ்வாய்க்கிழமை ,மணப்பாறை28.10.2025 செவ்வாய்க்கிழமை,துறையூர்07.10.2025 செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
துறையூர் பகுதி மின்நுகர்வோர்கள் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மீதமுள்ள கோட்டங்களான திருவரங்கம், இலால்குடி, திருச்சி கிழக்கு, திருச்சி நகரிய மற்றும் மணப்பாறை பகுதிகளைச் சார்ந்த நுகர்வோர்கள் மேற்கண்ட நாட்களில் அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தங்கள் மின்சாரப் பயன்பாடு, மின்கட்டணம், புதிய இணைப்பு கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தெரிவித்து உடனடித் தீர்வை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
“வரும் அக்டோபர் 2025 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெர்வித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது,” என மேற்பார்வை பொறியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வை பொறியாளர், திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம் / திருச்சி.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments