திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா புதுக்குடி ஆக்சிஜன் ஆலை மற்றும் பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தல், கொரோனா தடுப்பூசி மையங்கள் சென்று ஆய்வு செய்தார்.


ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களிடம் உரையாடி அவர்களிடம் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் பின்பற்றவும், தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கவும் வழிமுறைகள் வழங்கினார்.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தமிழக அரசின் கொரோனா கட்டுப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், அரசின் முன்கள பணியாளர்களாகிய எங்களோடு இணைந்து பொதுமக்களும் இந்த பெருந்தொற்றினை கட்டுப்படுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK








Comments