எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் 16 ஆண்டுகால முக்கிய கோரிக்கையான திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் G-கார்னர் பகுதியில் உயர்மட்டச் சுழற்சாலை (Flyover) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவாகத் தொடங்குவதற்கு, இரயில்வே துறைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை தீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (29.09.2025) 12:00 மணியளவில், திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, இப்பணிகள் குறித்து விரிவாக உரையாடினேன். இந்தச் சந்திப்பில், G-கார்னர் உயர்மட்டச் சுழற்சாலை கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் தடைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இதற்காக இரு துறைகளுன் ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடலுடன் செயல்பட்ட வேண்டிய அவசியம் குறித்தும், ஒன்றிய இரயில்வே அமைச்சரையும், ஒன்றிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சரையும் சந்தித்து தேவையான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
இதனுடன், திருச்சி இரயில் நிலைய வளாகத்தில் 142 ஆண் மற்றும் பெண் Auto ஓட்டுநர்கள் பயன்படுத்தும் நோக்கில், எனது MP நிதியில் கட்டப்பட உள்ள கழிவறைக்கு நிலம் ஒதுக்கித்தர கேட்டிருந்ததையும், அவர்களுக்கு நிழற்குடை அமைத்துத்தருவதாக ஏற்கனவே திருச்சி இரயில்வே அளித்திருந்த வாக்குறுதியையும் சுட்டிக்காட்டி, அவ்விரு கோரிக்கையையும் விரைந்து முடித்துத்தர வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன், திருச்சி தொகுதியின் மக்கள் நலன் கருதி, இரயில்வே தொடர்பான மற்ற சில முக்கிய கோரிக்கைகளையும் இந்தச் சந்திப்பில் முன்வைத்து விவாதித்தேன்.
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் G-கார்னர் பகுதியில் உயர்மட்டச் சுழற்சாலை அமைப்பதன் மூலம், அப்பகுதி விபத்து இல்லாத, பாதுகாப்பான பகுதியாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளேன். மக்களின் நல்வாழ்வுக்காகவும், இத்திட்டத்தின் வெற்றிக்காகவும் எனது முயற்சிகள் அனைத்து வழிகளிலும் தொடரும் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments