காந்தி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று

காந்தி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று

திருச்சி காந்தி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. கடந்த வருடம் கோவிட் தொற்று அதிகரித்த பொழுது காந்தி சந்தை முழுவதும் மூடப்பட்டது. பத்து மாதத்திற்கு பிறகு காந்தி சந்தை மீண்டும் திறக்கபட்டு இயங்கிவருகிறது.இந்நிலையில் திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சாலையோரக் கடைகள் உள்ளிட்ட 4 கடைகள் மூடல். வியாபாரிகள் 4 பேரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.

மேலும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

காந்திசந்தை வியாபாரிகள் முகக் கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81