தேசிய தடகள போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி

தேசிய தடகள போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி

பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கப் ஆப் சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் 2021ஆம் ஆண்டிற்கான  போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில், தேசிய சாதனை படைத்த வீரர் டூட்டி சந்த்தை பின் தள்ளி தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ்.தனலட்சுமி முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

என்ஐஎஸ் (NIS) வளாகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி, தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். இப்போட்டியில் ஒவ்வொரு படியிலும் இதற்கு முன்னர் படைக்கப்பட்ட வீராங்கனைகளின் அத்தனை சாதனைகளையும் முறியடித்தப்படியே தன்னுடைய சாதனை பயணைத்தை தொடங்கியிருக்கிறார் தனலட்சுமி. இறுதி போட்டிக்கு முன்னேறிய தனலட்சுமி 11.39 வினாடியில் போட்டி தூரத்தை கடந்து வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் சாதனை படைத்திருந்த ஒடிசாவின் டுட்டி சந் 11.58 வினாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் அதிவேக பெண்மணி என்ற பெருமைக்குரியவராக மாறியுள்ளார். திருச்சியை சேர்ந்த தனலட்சுமி தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்.

தாயின் உழைப்பால் மட்டுமே வாழ்ந்து வந்த  தன் குடும்ப சூழலை மாற்றியமைக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு போராடி வென்று வெற்றிவாகை சூடியுள்ளார். சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களுக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் தனலட்சுமி.

இன்று நடைபெற்ற போட்டியானது ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யும் போட்டியாகவும் இருந்தது எனினும் இப்போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தனலட்சுமி மற்றும் டூட்டி சந்த் இருவருமே தகுதி பெறவில்லை. எனினும் தன்னுடைய முயற்சி அடுத்த முறை கண்டிப்பாக ஒலிம்பிக்கிற்கு தன்னை கொண்டுச் செல்லும் என்று நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருக்கும் இந்த வீரமங்கைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU