திருச்சி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 தாண்டியிருந்தது. ஆனால் தற்போது 20 – 25 என்ற எண்ணிக்கையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆய்வகத்தில் நாளொன்றுக்கு 1800 பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

Advertisement
இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 305 பரிசோதனைகள் நடைபெற்று உள்ளது. சராசரியாக 30 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் லட்சுமி கூறும் போது….. தற்போது கொரோனா பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், குளிர் காலத்தில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Advertisement
வெயில் காலத்தில் கொரோனா தாக்கம் பெரிதாக இருக்காது என்று கூறப்பட்டாலும், வெயில் காலத்தில் அதிகமான தொற்று பரவியது. எனவே தொடர்ந்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           77
77                           
 
 
 
 
 
 
 
 

 03 December, 2020
 03 December, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments