திருச்சி அரசு அதிகாரி சஸ்பெண்ட் - செல்போனுக்கு தடை விதித்த நீதிபதி
திருச்சியில் உள்ள மண்டல தொழிற்சாலையின் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. கடந்த ஜனவரி (29.01.2022) மாதம் பணியில் இருந்த போது, உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த அவர், மொபைல் போனை பயன்படுத்தி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை படம் பிடித்துள்ளார்.
இதைப் பார்த்த உயர் அதிகாரி, அவரது மொபைல் போனை பறித்து அலுவலக காவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
தொடர்ந்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ராதிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் ராதிகா தரப்பில், மதுரை உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், அரசு அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி படம் பிடித்தற்காக சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், அரசு அலுவலக பணியில் இருப்பவர்கள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று நான்கு வாரங்களுக்குள் அனைத்து அரசு அலுவலகங்களுக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO