Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முதல் முயற்சியிலேயே ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள திருச்சி அரசுப்பள்ளி மாணவன்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி பற்றிக் கேள்விப்படாத திருச்சியை சேர்ந்த 17 வயது மாணவன் ஜேஇஇ தேர்வில் முதல் முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார். அகில இந்திய தரவரிசையில் 12175 மற்றும் obc-ncl தரவரிசையில் 2503 இடம் பெற்றிருக்கிறார். திருச்சி நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார் 2019ஆம் ஆண்டு JEE பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து போட்டி தேர்வுகளுக்கு பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து திருச்சி NIT மாணவர்கள் நடத்தும் IGNITTE திட்டம் வழங்கப்பட்டது.

30 நிமிடங்களுக்கு நீடிக்கும் அழைப்புகள் மூலம் தனது அடிப்படை மொபைல் போனை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் பெற்றுவந்த நிலையில், தன்னுடைய தந்தையார் பத்தாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கி தந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள உணவகங்களில் உதவியாளராக பணியாற்றி வரும் அருணின் தந்தை பொன்னழகன் குடும்ப சூழல் காரணமாக தனியார் பள்ளியில் படித்த வந்த மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். 2019ஆம் ஆண்டு வரை ஐஐடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த அவர் பின்னர் பயிற்சியால் இன்றைக்கு ஐஐடியில் பெறுவதற்கான இடத்தை பிடித்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவரின் குடும்பம் மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதில் அவர்களுக்கு மிகுந்த சிக்கல் உள்ளது. அவர்களின் மாத வருமானமே 10,000 என்பதால் சில நாட்களில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்க உள்ளது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவனின் கனவை நிறைவேற்ற நிதி உதவி தேவைப்படுவதாக குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர். மாணவனின் கனவை நிஜமாக்க  உதவ நினைப்பவர்கள் அவரது குடும்பத்தினரை 9698446253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *