திருச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் தலைமை அலுவலக துணை ஆட்சியர் இயக்கம் ரமேஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று எச்டி செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்குவது எப்படி , நலவாரியத்தில் பதிவு செய்து பலன்களை பெறுவது எப்படி என்பது தொடர்பாக தகவலும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் மூலம் hd செட்டாப் பாக்ஸ்களை தலைமை அலுவலக துணை ஆட்சியர் இயக்கம் ரமேஷ் குமார் வழங்கினார்.இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட தனி வட்டாட்சியர் அகிலா மற்றும் தலைமை அலுவலக துணை மேலாளர் மாரிமுத்து மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision
Comments