திருச்சியில் 20 ஆண்டு காலத்தில் இல்லாத அதிகப்படியான வெப்பநிலையால் மக்கள் அவதி  

திருச்சியில் 20 ஆண்டு காலத்தில் இல்லாத அதிகப்படியான வெப்பநிலையால் மக்கள் அவதி  

இம்மாதத்தின் அதிக  வெப்ப நாளாக  சனிக்கிழமை (நேற்று)  திருச்சியில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.இந்த வெப்ப நிலையானது கடந்த 20 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவாகிய அதிகப்படியான வெப்பநிலை ஆகும். 

திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் மார்ச் மாதத்தின் 30 மற்றும் 31 தேதிகளில் வெப்பநிலை பதிவாகியது.


 
50 ஆண்டுகளில் இந்த இரண்டு நாட்களின் வெப்பநிலையானது அதிகப்படியான வெப்பநிலையை கொண்ட நாளாகப் பதிவாகியுள்ளது. அது மட்டுமின்றி இந்திய வானிலை ஆய்வு துறை அளித்த அறிக்கையின் படி திருச்சி, கரூர், சென்னை மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஏப்ரல் 7ஆம் தேதி வரை இம்மாவட்டங்களில் 4 முதல் 6 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 42 புள்ளி 6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையோடு திருத்தணி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81