திருச்சி மாநகரில் மேலப்புதூர் பகுதியில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும், இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவானது இன்று வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்னையின் திருக்கொடியானது பங்குமக்களால் துதிபாடியவாறு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பேராலயத்தை வந்தடைந்தது.
பின்னர் பேராலய பங்குத்தந்தை சவரிராஜ் மற்றும் உதவி பங்குதந்தை சார்லஸ் அவர்களால் திருக்கொடி அர்ச்சிக்கப்பட்டு, பின்னர்வானவேடிக்கைகள் முழங்கிட மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் திருக்கொடி ஏற்றப்பட்டு கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து பங்குத்தந்தை மற்றும் ஆலய பங்குத்தந்தை ஆகியோர் தலைமையில் சிறப்புபாடல் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்குமக்கள் கலந்துக்கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு தினசரி மறையுரை, திருப்பலிகள், நற்கருணை ஆசிர்வாத நிகழ்ச்சிகளும் நடைபெறும். முக்கிய நிகழ்வான மரியன்னையின் ஆடம்பர திருத்தேர்பவனி வருகிற செப்டம்பர் 8ம்தேதியன்று இரவு ஆயரின் கூட்டு பாடவ் திருப்பலியுடன் நடைபெறும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments