Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

எதிர்காலத்தின் தொழில்நுட்ப நகரங்களின் பட்டியலில் திருச்சி மாநகர்!

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வணிக செயல்முறை மேலாண்மை துறையும் வளர்ச்சி பாதையை மதிப்பீடு செய்து குளோபல் ரியல் எஸ்டேட் சேவை வழங்குநரான சாவில்ஸ் வெளியிட்ட அறிக்கை அலுவலகத்திற்கான தேவையை காணக்கூடிய முக்கிய நகரங்களில் திருச்சி இடம்பெற்றுள்ளது.

சென்னை முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.சர்வதேச நிறுவனங்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்பை  விரிவாக்க தயாராக உள்ள 15 முக்கிய நகரங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.

Savills india இம்மாதம் வெளியிட்ட “எதிர்காலத்தின் தொழில்நுட்ப நகரங்கள்” அறிக்கையில் உள்கட்டமைப்பு, மனிதவளம், செலவுகள் மற்றும் தொழில் ஆகிய நான்கு அம்சங்களில்   பகுப்பாய்வு செய்யப்பட்டனர்.

 ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆரம்பத்தில் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் ஆய்வுக்கு பிறகு இறுதிப் பட்டியலில் 33 நகரங்கள் மட்டுமே இடம் பிடித்தனர் தடையில்லா மின்சாரம், அதிவேக இணையம் ,போக்குவரத்து இணைப்பு, தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பு, ஆங்கிலம் பேசும் திறன், வாடகைச் செலவு மற்றும் நகரங்களில் வணிக வாய்ப்புகள் ஆகியவை சமீபத்திய மற்றும் நம்பகமான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டன மொத்தத்தில் சென்னை மற்றும் பெங்களூரு உட்பட 11 நகரங்களில் இத்துறையில் முன்னிலையில் உள்ளன.

கொரோனா காலத்தின்போது திறமைசாலிகள் தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகள் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமானவை.

 இந்த நகரங்கள் சென்னை மற்றும் பெங்களூரில் ஏற்கனவே நிறுவப்பட்ட IT-BPM இடங்களுக்கு துணை தளங்களாக மாறும் என்று Savills indis ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிர்வாக இயக்குனர் அரவிந்த் நந்தன் கூறினார்.

தொழில்நுட்ப நிறுவனங்களில் இருப்பு, தகுதி வாய்ந்த பணியாளர்கள், ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் குறைந்த வாடகை ஆகியவை சிறந்த நகரத்திற்கான அளவுருக்கள் உள்ளடங்கும்.

திருச்சி கோவொர்க்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் பிரபாகர் கூறுகையில், சர்வதேச கல்வி ஆலோசனை மற்றும் சுகாதார நிறுவனம் திருச்சியில் அலுவலக இடத்தை நாடியுள்ளனர் உள்கட்டமைப்பு, மனித மூலதனம்,செலவு மற்றும் தொழில் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களில் முதல் 10 பட்டியலில் போபால் கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *