Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்தியாவில் 50 லட்சம் மரக்கன்று நட்டு சாதனை படைத்த ஒரே மாவட்டம் திருச்சி – ஆட்சியர் பேச்சு

திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், இனாம்குளத்தூரில்   மாவட்ட சட்டப்பணிகள் ,ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை சார்பில்

நடைபெற்ற நிகழ்வில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை மாவட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசிய போது மரம் நடுதல் நிகழ்வாக இருக்க கூடாது. 

 அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அரசின் 850 திட்டங்கள், 42 துறைகள் உள்ளது.திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் இருந்து

திட்டடங்களுக்கு விண்ணப்பம் வருவதில்லை.

இந்தியாவிலேய50 லட்சம் மரக்கன்று நட்டு காடுகளாக்கியுள்ள நடப்பட்ட ஒரே மாவட்டம் திருச்சி.மரம் நடுவதை ஒரு நிகழ்ச்சியில் துவக்கி வைப்பதற்க்கு மட்டுமல்லாமல்மரம் வளர்ப்பை

இயக்கமாக மாற்ற வேண்டும்.108 திவ்ய தேசத்திற்க்கு ஸ்தல மரம் இந்தியாவில் திருச்சியில் மட்டும் தான் வைத்து வளர்த்துள்ளளோம்.

மரம் இல்லையென்றால் செவ்வாய் கிரகம் போல் நம் பூமி இருக்கும்.மரத்தின் அழிவு நடக்கிறது மர அழிவு புள்ளி விபரத்தை கேட்டால் தலை சுற்றி விடும். 

சுகாதரமான காற்று,சுத்தமான குடிநீர் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல வேண்டும் என்றால் மரங்களை நட வேண்டும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி நீதிமன்ற மாவட்ட நீதிபதிகள்,வனத்துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgf

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *